ஸ்ரீதேவியின் இரண்டாவது மகளும் சினிமாவுக்கு வருகிறார்!

நடிகை ஸ்ரீதேவியின் மூத்த மகள் ஜான்வி கபூர் நடித்த தாதக் என்ற முதல் இந்தி படம் கடந்த ஜூலை மாதம் வெளியானது. இதான் கத்தாருக்கு ஜோடியாக அவர் நடித்த அந்த படத்தை கரன் ஜோஹர் தயாரித்திருந்தார்.

இந்த நிலையில், அதே தயாரிப்பாளர் கரன் ஜோஹர், 2019-ம் ஆண்டு ஸ்ரீதேவியின் இளைய மகள் குஷிகபூரையும் தான் தயாரிக்கும் படத்தில் அறிமுகம் செய்யப்போவதாக தற்போது தெரிவித்துள்ளார். இந்த படத்தில் பாலிவுட் நடிகர் ஜாவேத் ஜாப்ரியின் மகன் மிசான் நாயகனாக அறிமுகமாகிறார். இந்நிலையில், தற்போது குஷிகபூருக்கு நடிப்பு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.