விஸ்வாசம் டிரெய்லரைப்பார்த்து வியந்த குஷ்பு!

சிவா இயக்கத்தில் அஜீத் நடித்துள்ள விஸ்வாசம் படத்தின் டிரெய்லர் வெளியாகி பெரிய அளவில் வைரலாகிக்கொண்டிருக்கிறது. குறிப்பாக அதற்கு முன்பே வெளியான ரஜினியின் பேட்ட டிரெய்லருக்கு பதில் கொடுப்பது போன்று விஸ்வாசம் டிரெய்லர் அமைந்திருப்பதால்  இவர்கள் இருவரது ரசிகர்களுக்கிடையேயும் மோதலை உருவாக்கியது.

இந்த நிலையில்,  திரையுலகைச்சேர்ந்த பிரபலங் களும் பேட்ட, விஸ்வாசம் டிரெய்லர்களை வியந்து பாராட்டி வருகின்றனர். அந்த  வகையில், நடிகை குஷ்பு, அஜீத்தின் விஸ்வாசம் டிரெய்லரைப்பார்த்து நான் வாயடைத்துப்போனேன். அத்தனை அதிரடியாக இருந்தது. டிரெய்லரைப்பார்த்த எனக்கு எப்போது அந்த படத்தை பார்ப்போம் என்கிற ஆர்வம் ஏற்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.