குலேபகாவலி – விமர்சனம்

திருட்டு கும்பலைப்பற்றிய கதையில் இந்த குலேபகாவலி படத்தின் கதை அமைந்துள்ளது. அதாவது, சிலை திருட்டு கும்பலின் தலைவனாக இருககும் மன்சூரலிகானிடம் வேலை செய்யும் பிரபுதேவா, குலேபகாவலியில் உள்ள ஒரு கோயிலில் சிலையை திருடுகிறார்.

அப்போது அதே கோயிலில் இரண்டு தலைமுறைக்கு முந்தைய ஒருவர் புதையல் வைத்திருப்பதாக சொல்ல, அதை கண்டுபிடிக்க ஒரு கும்பல் வருகிறது.

மேலும், மண்வாசனை ரேவதி, செண்டிமென்டாக பேசி கார்களை திருடும் இன்னொரு கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

ஒரு கட்டத்தில் பிரபுதேவா, ரேவதி, ஹன்சிகா, முனீஷ்காந்த் ஆகிய 4 பேரும் கூட்டணி அமைத்துக்கொண்டு அந்த குலேபகாவலி கோயிலுக்குள் புதைத்து வைத்திருக்கும் புதையலை எடுக்க முயற்சி செய்கிறார்கள்.

அவ ர்கள் அந்த புதையலை எடுத்தார்களா? இல்லையா என்பதே மீதிக்கதை.

நீண்ட இடைவேளைக்குப்பிறகு இந்த படத்தில் நாயகனாக நடித்திருக்கும் பிரபுதேவா, காமெடி கலந்த நாயகனாக நடித்துள்ளார். அதோடு, நாயகி ஹன்சிகாவுடன் டூயட் பாடும் காட்சிகளில் வித்தியாசமான நடன அசைவுகளை கொடுத்திருக்கிறார்.

ரேவதி யாருமே எதிர்பார்க்காத வகையில் ஒரு திருடியாக நடித்து படம் முழுக்க ஸ்கோர் பண்ணிருக்கிறார். டான் ஆனந்தராஜினால் புதையல் எடுக்க அனுப்பப்படும் முனீஷ்காந்த், பிரபுதேவாவின் நண்பனாக நடித்துள்ள யோகிபாபு மற்றும் மொட்டராஜேந்திரன், சத்யன் என அனைவரும் படம் முழுக்க காமெடி கலாட்டா செய்திருக்கிறார்கள்.

ஹன்சிகா வழக்கம்போல் மாடர்ன் கெட்டப்பில் கவர்ச்சிகரமாக நடித்துள்ளார். அவரும் இந்த திருட்டு கும்பலில்தான் இருக்கிறார்கள்.

ஆக, திருடும் பொருளை பங்கிட்டுக்கொள்ள வேண்டும் என்கிற அடிப்படையில் கதையோட்டம் நகர்ந்துள்ளது.

மற்றபடி வலுவான கதைக்களம் எதுவும் இல்லை. சீரியசான திருட்டை காமெடியாக செய்கிறார்கள். அந்த வகையில், இந்த குலேபகாவலி படத்தை 2 மணி நேரம் கலகலப்பாக சிரித்து ரசிக்கும்படி படமாக்கியிருக்கிறார் இயக்குனர் கல்யாண்.

மொத்தத்தில் குலேபகாவலி- ஜாலியான படம்.