கீர்த்தி சுரேஷூக்கு கோவில்?

1535495_1469508986643613_5089452185407575900_nநடிகைகளுக்கு கோவில் கட்டி கும்பாபிஷேகம் செய்வது தமிழ் ரசிகர்களுக்கு புதிதில்லை. குஷ்பு முதல் நமீதா வரை ஏற்கனவே பல நடிகைகளுக்கு கோவில் கட்டியுள்ள நிலையில் தற்போது வளர்ந்து வரும் நாயகியான கீர்த்திசுரேஷுக்கு கோவில் கட்டியுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

ரஜினிமுருகன், தொடரி, ரெமோ ஆகிய தொடர் வெற்றிகளுக்கு பின்னர் தற்போது கீர்த்தி, விஜய்யுடன் ‘பைரவா’ படத்தில் நடித்து வருகிறார். மேலும் சூர்யாவுடன் ‘தானா சேர்ந்த கூட்டம்’ உள்பட பல பெரிய பட்ஜெட் படங்களிலும் நடிக்க ஒப்பந்தமாகி வருவதால் கீர்த்திக்கு தமிழகத்தில் ரசிகர்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வண்ணம் உள்ளது. ஆனால் கோவில் கட்டுமளவுக்கு கீர்த்திக்கு வெறித்தனமான ரசிகர்கள் இருப்பது இப்போதுதான் தெரிய வந்துள்ளது.