காயங்குளம் கொச்சுன்னி

இன்னைக்கு நம்ம திரை விமர்சனம் நிகழ்ச்சியில் மலையாளத்தில் வெளிவந்துள்ள காயங்குளம் கொச்சுன்னி என்ற படத்தோடு விமர்சனத்தைதான் பார்க்கப்போறோம்.

இந்த படத்துல மோகன்லால், நிவின்பாலி, பிரியாஆனந்த் ஆகியோர் முக்கிய வேடங்கள்ல நடிச்சிருக்காங்க. ரோசன் ஆண்ட்ரேவ் இந்த படத்தை இயக்கியிருக்கிறர்ர. 1830களில் பிரிட்டிஷ் ஆதிக்கம் இந்தியாவில் இருநதபோது கேரளாவில் வாழ்ந்த வீரன் காயங்குளம் கொச்சுன்னியின் வாழ்க்கை கதையில் உருவாகியிருக்கு.

காய்குளம் கொச்சுன்னி சிறு வயதாக இருந்தபோது அவரது தந்தை திருட்டுப்பட்டம் கட்டப்படுகிறார். அவரை நிர்வாணப்படுத்தி மரத்தில் கட்டி வைத்து அடிக்கிறார்கள். இதைப்பார்த்த காயங்குளம் கொச்சுன்னியான நிவின்பாலி, தான் எக்காரணம் கொண்டும் திருடவே கூடாது என்ற உறுதியுடன் வாழ்ந்து வருகிறார்.

ஆனால் ஒரு கட்டத்துல உணவுக்காக திருட வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்படுகிறார். அதோடு மோகன்லாலின் திருட்டு கும்பலுடன் சேர்ந்து கொண்டு காட்டுக்குள் பதுங்கியிருந்தபடி நாட்டுக்குள் வந்து திருடுகிறார். அப்படி திருடியதை ஏழை மக்களுக்கு கொடுக்கிறார்.

அதேசமயம் திருடிய குற்றத்திற்காக அரசாங்கத்தினால் தேடப்படும் குற்றவாளியாகிறார். அதோடு தாழ்ந்த சாதியினரை தீட்டாக நினைக்கும் உயர்ஜாதியினருக்கும் எதிராகவும் போராடுகிறார்.

இதையடுத்து பிரிட்டீஷ் அரசாங்கம் இவரை பிடித்து தண்டனை கொடுக்க திட்டம் தீட்டுகிறது.

இதன்பிறகு என்ன நடக்கிறது அப்படிங்கிறதுதான் காயங்குளம் கொச்சுன்னி படத்தின் மீதிக்கதை.

மலையாள சினிமாவில் இதுவரை வெளியான படங்களில் அதிக பட்ஜெட்டில் அதாவது 45 கோடியில் இந்த படம் தயாராகியிருக்கிறது. நிவின்பாலி கதாநாயகினாக நடிக்க, மோகன் லால் அவரை காப்பாற்றும் ஒரு வேடத்தில் வந்து செல்கிறார். பிரியா ஆனந்த் நாயகியாக நடித்துள்ளார். இரண்டு மெகா ஸ்டார்கள் நடித்த படம் என்ப தால், இந்த படம் இதுவரையில் லாத அளவுக்கு கேரளாவில் வசூல் சாதனை புரிந்து கொண்டிருக்கிறது.

அதற்கேற்ப இந்த பீரியட் கதையை கொஞ்சமும் போரடிக்காமல் திரைக்கதையை நகர்த்தி ரசிகர்களின் மனதில் இடம்பிடித்துள்ளார் இயக்குனர். கூடவே பின்னணி இசை மற்றும் பாடல்களும் படத்திற்கு கூடுதல் பலம் சேர்த்துள்ளது.

மற்றபடி காயங்குளம் கொச்சுன்னி அரசாங்கத்திடம் இருந்து திரும்பத்திரும்ப தப்பிச்செல்கிறார். கிளைமாக்சிலும் தப்பித்து விடுகிறார் என்பது போன்று கதையை முடித்திருக்கிறார் இயக்குனர். ஒரு தனிப்பட்ட கற்பனை கதை என்றில்லாமல் ஒருவரின் வாழ்க்கை வரலாறு கதை என்பதால் இந்த படத்தின் கதையை இப்படித்தான் சொல்ல முடியும். அதனால் அந்த கோணத்தில் பார்க்கும்போது இப்படம் ஒரு சிறந்த படமாகவே தெரிகிறது.

மலையாள படங்களுக்கே உரிய வழக்கமான பாணியில் இருந்து மாறுபட்டு மற்ற மொழி ரசிகர்களும் ரசிக்கும் வகையில் இப்படம் உருவாகியிருக்கிறது. அதனால் காயங்குளம் கொச்சுன்னி படம் கேரளா மட்டுமின்றி தமிழ் உள்ளிட்ட மற்ற தென்னிந்திய மொழிகளிலும் வசூல் சாதனை படைக்கும் படமாக அமைந்துள்ளது.

மொத்தத்தில் காயங்களம் கொச்சுன்னி- ஒரு வீரனின் வாழ்க்கை பதிவு.