கனா- விமர்சனம்

சத்யராஜ்-ஐஸ்வர்யாராஜேஷ் நடிப்பில் திரைக்கு வந்துள்ள படம் கனா. சிவகார்த்திகேயன் தயாரித்து ஒரு முக்கிய கேரக்டரிலும் நடித்துள்ள இந்த படத்தை அருண்ராஜா காமராஜ் இயக்கியுள்ளார். இப்படத்தின் விமர்சனத்தை இங்கே பார்க்கலாம்.

இந்த படம் கிரிக்கெட்டில் இந்திய அளவில் சாதிக்க துடிக்கும் ஒரு விவசாயியின் மகளைப்பற்றிய கதை
யில் உருவாகியிருக்கிறது.

அதாவது பொதுவாக பெற்றோர்கள் தாங்கள் சாதிக்க முடியாதததை தங்களது பிள்ளைகளின் மீது திணித்து அவர்களை சாதிக்குமாறு தூண்டுவார்கள். ஆனால் இந்த கதையைப்பொறுத்தவரை சத்யராஜ் கிரிக்கெட் பைத்தியமாக இருக்கிறார். டிவியில் கிரிக்கெட் விளையாட்டு ஒளிபரப்பு செய்தால் அதை தன்னை மறந்து ரசிக்கிறார். இந்தியா தோற்று விட்டால் கணகலங்கி விடுகிறார்.

இப்படி அப்பா கிரிக்கெட்டை ரசிப்பதைப்பார்த்த மகள் ஐஸ்வர்யா ராஜேஷ், அப்பாவின் சந்தோசத்திற்காக தானும் இந்திய கிரிக்கெட் அணியில் விளை யாட வேண்டும் என்று உறுதியெடுக்கிறர்ர.

தான் கிரிக்கெட் விளையாடுவதையும் அப்பா டிவியில் பார்த்து மகிழ வேண்டும் என்று முடிவு செய்து

அதையடுத்து கிரிக்கெட்டை விளையாட்டை கிராமத்தில் விளையாடும் பையன்களுடன் சேர்ந்து பயிற்சி எடுக்கிறார். ஆனால் ஒரு பெண் கிரிக்கெட் விளையாடுவதால் ஏகப்பட்ட விமர்சனங்கள் வருகிறது. ஐஸ்வர்யா ராஜேஷின் அம்மாவே அதை தடுக்கிறார். ஆனால் சத்யராஜ் மகளுக்கு முழு சப்போட்டாக இருக்கிறார்.

இப்படியான சூழ்நிலையில், இந்திய கிரிக்கெட் அணியில் ஐஸ்வர்யா ராஜேஷ் இடம்பிடித்தாரா? இல் லையா? என்பதுதான் கனா படத்தின் மீதிக்கதை.

ஒரு விவசாயியாக மிக தத்ரூபமாக நடித்திருக்கிறார் சத்யராஜ். விவசாயியாக பெருமைப்பட்டுக்கொள்வ து, விவசாய கடன் கட்ட முடியாமல் வங்கி மேனரிடம் தலைகுனிந்து நிற்பது, வீடு ஜப்தியாவது போன்ற காட்சிகளில் படம் பார்க்கும் ரசிகர்களின் கண்களை குளமாக்கி விடுகிறார் சத்யராஜ்.

மகள் கிரிக்கெட் விளையாடுவதை ஊரார் புறம்பேசும்போது அதை நினைத்து ஒரு சராசரி அப்பா போன்று பீல் பண்ணாமல், பெண்களும் சாதிக்க வேண்டும். என் மகள் அதற்கு ஒரு முன்னோடியாக இருப்பாள் என்று அவர் பெண்களுக்கு ஆதரவாக பேசும் காட்சிகளில் கைதட்டல் பெறுகிறார்.

அதேபோல் சத்யராஜின் மகளாக நடித்துள்ள ஐஸ் வர்யா ராஜேஷ், அந்த கேரக்டருக்கு மிக பொருத்தமாக இருக்கிறார். சின்னவயதாக இருக்கும்போதே அப்பா டிவியில் கிரிக்கெட் விளையாட்டை ரசிப்பதை பார்த்து அவருக்காகவே தானும் டிவியில் வரவேண்டும் என்று அவர் எடுக்கும் பயிற்சி, முயற்சி எல்லாமே மிக யதார்த்தமாக படமாக்கப்பட்டிருக்கிறது.

அதேபோல், கிரிக்கெட் கோட்சாக வரும் சிவகார்த்திகேயன், ஐஸ்வர்யாராஜேஷ் துவண்டுபோகும்போது அவருக்கு உத்வேகத்தை கொடுக்கும் வார்த்தைகளை பேசுவது படத்திற்கும், அந்த கதாபாத்திரத்திற்கும் இன்னும் பலம் கூட்டுவதாக அமைந்திருககிறது.

அந்த வகையில், கனா என்ற படத்தை சீன் பை சீன் அற்புதமாக செதுக்கி படமாக்கியிருக்கிறார் அருண்ராஜா காமராஜ். சினிமாவில் அவருக்கு ஒரு பெரிய இடம் காத்திருக்கிறது என்பதற்கு இந்த படம் நல்ல தொரு பிள்ளையார் சுழி போட்டிருக்கிறது.