பழங்கால தோற்றத்தில் இந்தியன்-2 செட்!

1996ல் ஷங்கர் இயக்கிய இந்தியன் படத்தில் நடித்த கமல்ஹாசன், 22 வருடங்களுக்குப்பிறகு இப்போது இந்தியன்-2 படத்தில் நடிக்க தயாராகிக்கொண்டி ருக்கிறார். இந்தியன் படத்தை விடவும் இந்த படம் பிரமாண்டமான பட்ஜெட்டில் தயாராகிறது. அதோடு உலக அளவில் இந்த படத்தை வெளியிட திட்டமிட்டிருப்பதால் உலக தரமுள்ள டெக்னீசியன்கள் பலரும் இந்த படத்தில் இடம்பெறுகிறார்கள்.

மேலும், இந்த படத்தில் கமலுடன் சிம்பு, பகத்பாசில், காஜல் அகர்வால் என பலர் நடிக்கயிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ள நிலையில், ஜனவரியில் சென்னையில் இந்தியன்-2 படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு தொடங்குகிறது. முன்னதாக கடந்த சில மாதங்களாக இந்த படத்திற்கான செட் அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது.

இந்நிலையில், ஒளிப்பதிவாளர் ரவி வர்மன் பழங்கால தோற்றத்தில் இருக்கும் அந்த பிரமாண்ட செட்டுடன் டைரக்டர் ஷங்கர் போட்டோவையும் இணைத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார்.