கமலின் விஸ்வரூபம்-2 படத்திற்கு தடை!

கமல் இயக்கி நடித்து வெளியான விஸ்வரூபம் படம் மிகப்பெரிய எதிப்புகளை சந்தித்து. அந்த படத்தில் முஸ்லீம்களுக்கு எதிரான காட்சிகள் இடம்பெற்றிருப்பதாக கொடி பிடித்தனர். அதையடுத்து விஸ்வரூபம் படத்தையே வெளியிட தடை விதித்தார் அப்போதைய முதல்வரான ஜெயலலிதா. பின்னர் கமலுக்கு ஆதரவாக திமுக தலைவர் கருணாநிதி குரல் கொடுத்த பிறகு ஒருவழியாக விஸ்வரூபம் படத்திற்கான தடையை நீக்கினார் ஜெயலலிதா.

இந்த நிலையில், தற்போது கமல் இயக்கி நடித்துள்ள விஸ்வரூபம்-2 படம் ஆகஸ்டு 10-ந்தேதி வெளியாக உள்ள நிலையில், இப்படத்திற்கு தடை கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. காரணம், மர்மயோகி என்ற படத்தை தனது ராஜ்கமல் பிலிம்சுடன் பிரமிட் சாய்மீரா என்ற நிறுவனத்தையும் இணைத்து தயாரிக்க இருந்தார் கமல்.

அதற்காக பிரமிட் சாய்மீரா நிறுவனத்திடம் ரூ. 4 கோடி பெற்ற கமல், அந்த படத்தை எடுக்காமல் உன்னைப்போல் ஒருவன் படத்தை தயாரித்திருக்கிறார். இதனால் பிரமிட் சாய்மீரா நிறுவனம் கொடுத்த ரூ. 4 கோடியானது வட்டியோடு சேர்த்து இப்போது ரூ. 5.44 கோடியாகி விட்டதாம்.

அதனால், அந்த படத்தை தரும் வரை விஸ்வரூபம்-2 படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டு மென்று பிரமிட் சாய் மீரா நிறுவனம் நீதிமன்றத்தில் தடை கோரியுள்ளது. அதன்காரணமாக ஆகஸ்டு 6-ந்தேதி நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டுமென்று கமல் உள்ளிட்ட பலருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.