காங்கிரசுடன் கமல் கூட்டணியா?

நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் தலைமையில் ஏற்க கமல்ஹாசன் ஏற்றுள்ளதாக திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார். மேலும் ராகுல்காந்தியுடனான சந்திப்புக்கு பிறகு கூட்டணிக்கான சிக்னலை அவர் காட்டிவிட்டதாகவும் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் கூட்டணி குறித்து சென்னை விமானநிலையத்தில் பேசிய மக்கள் நீதி மய்யத்தின் தலைவரான கமல்ஹாசன், “உள்ளாட்சி தேர்தல் கண்டிப்பாக நடத்த வேண்டும். தேர்தல் நடத்த மக்கள் நீதி மய்யமும் தொடர்ந்து முயற்சி செய்து வருகிறது. காங்கிரஸ் உடன் கூட்டணி கொடுப்பது குறித்து நான் சொல்வதுதான் சிக்னல். நான் கூறியதாக திருநாவுக்கரசர் சொல்வது வெறும் செய்தி மட்டுமே. வேறு ஒரு விஷயத்திற்காகதான் ராகுல்காந்தியை சந்தித்து பேசினேன்” எனக் கூறினார்.