கமலின் இந்தியன்-2 தொடங்கியது!

ரஜினி நடித்துள்ள 2.ஓ படத்தின் அனிமேஷன் வேலைகளில் கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக ஈடுபட்டு வந்த டைரக்டர் ஷங்கர், தற்போது அப் படத்தின் வேலைகள் முடிவடையும் தருவாயில் இருப்பதோடு படத்தின் ரிலீஸ் தேதியும் அறிவிக்கப் பட்டு விட்டதை அடுத்து, தனது புதிய படமான இந்தியன்-2 பட வேலைகளை தொடங்கியிருக்கிறார்.

மீண்டும் கமல்ஹாசனே நாயகனாக நடிக்கும் இந்த படத்தில் நயன்தாரா அவருக்கு ஜோடியாகவும், மேலும் இன்னொரு இளவட்ட நடிகரும் முக்கிய ரோலில் நடிக்கிறார். அனிருத் இசையமைகிறார் . மேலும், இந்தியன்-2 படத்தின் பிரீ புரொடக்சன்ஸ் வேலைகளில் ஏற்கனவே ஈடுபட்டு வந்த டைரக்டர் ஷங்கர், தற்போது லொகேசன் பார்க்கும் பணிகளில் ஒளிப்பதிவாளர் ரவி வர்மனுடன் இணைந்து ஈடு பட்டுள்ளார். 2.ஓ படத்தின் ரிலீசுக்கு முன்பே இந்தியன்-2 படப்பிடிப்பு தொடங்கும் என்று தெரிகிறது.