கமல்-கெளதமி பிரிவுக்கு இவர்தான் காரணமாம்!

kamal-haasan-gouthami-at-film-france-press-meet-stills-91கமல்ஹாசனும் கௌதமியும் திருமணம் செய்யாமல் கடந்த 13 வருடங்களாக சேர்ந்து வாழ்ந்து வருகின்றனர். ஏற்கனவே வாணிகணபதி, சரிகாவை விவாகரத்து செய்த நிலையில், கௌதமியுடன் 13 ஆண்டுகளாக சேர்ந்து வாழ்ந்து வந்தார்.

தற்போது கௌதமி கமலுடனான உறவு பிரேக் ஆனதாக தன் ட்விட்டர் பக்கத்தில் அவரே பதிவிட்டுள்ளார். இது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சில மாதங்களுக்கு முன் கௌதமிக்கும், ஸ்ருதிஹாசனுக்கும் சபாஷ் நாயுடு படத்திலிருந்து சில கருத்து வேறுபாடு இருந்ததாக சொல்லப்படுகிறது.

தற்போது இப்பிரச்னைக்கு ஸ்ருதி தான் காரணமோ என கிசுகிசுக்கள் எழுந்துள்ளது. ஆனால் கமலின் ஆடை வடிவமைப்பாளராக இருக்கும் கௌதமி தன் மகளின் வாழ்க்கைக்காக இப்படி ஒரு முடிவை எடுத்ததாக அவரே தெரிவித்துள்ளார்.