கடைக்குட்டி சிங்கம்

பசங்க பாண்டிராஜ் இயக்கத்துல கார்த்தி நாயகனாக நடிச்சிருக்கிற படம். இன்றைக்க நாட்டுல விவசாயிககள் பிர்சிசனை,
மீனவர்கள் பிரச்சினை, மாணவர்கள் பிரச்சினைன்னு பல பிரச்சினைகள் ஓடிக்கிட்டிருக்கு. அதுல இருந்து விவசாயிகள் பிரச்சினையை கையில எடுத்திருக்காரு டைரக்டர் பாண்டிராஜ்.

இந்த கடைக்குட்டி சிங்கம் படத்தோடு கதைச்சுருக்கத்தை சொல்லனும்னா. கிராமத்துல பெரிய விவசாயி சத்யராஜ். அவருக்கு வரிசையா பொட்ட புள்ளைங்களா பொறக்குது. ஒரு கட்டத்துல அவர் மனைவி விஜி சந்திரசேகருக்கு இனிமே குழந்தை பொறக்காதுன்னு டாக்டருங்க சொல்லிடுறாங்க. அதனால் தனக்கு வாரிசு வேணும்னு ரெண்டாவது கல்யாணம் பண்ணியாவது ஆம்பளை புள்ளை பெத்துக்கு தயாராவுறாரு சத்யராஜ். அப்ப தனது தங்கை பானுப்பிரியாவையே அவருக்கு இரண்டாவது திருமணம் செய்து வைக்கிறார் அவர் மனைவி விஜி சந்திரசேகர்.

ஆனா பானுப்பிரியாவும் ஒரு பெண் குழந்தை யைத்தான் பெத்து எடுக்கிறாரு. இதனால் சத்யராஜ்க்கு அதிர்ச்சி. ஆனா அப்போது பார்த்து மருத்துவர்கள் இனிமே குழந்தையே பிறக்காதுன்னு சொன்ன விஜி சந்திரசேகருக்கு ஒரு ஆண் குழந்தை பிறக்கிறது. அவர்தான் நம்ம கடைக்குட்டி சிங்கம் கார்த்தி.

இவர் பொறக்கும்போது சத்யராஜின் மகளுக்கும் ஒரு மகன் பிறக்கிறான் அவர்தான் சூரி. ஆக, கார்த்தியும், சூ¡¢யும் மாமன் மச்சானாக வளர்கிறர்ரகள்.

இவர்களில் கார்த்திக்கு விவசாயம் என்றால் உயிர். தான் ஒரு விவசாயி என்று சொல்லிக்கொள்வதை பெருமையாக நினைக்கிறர். விவசாயத்தில் நல்ல லாபம் சம்பாதிக்கும் அவர் அக்காள்களிடன் ரொம்ப அன்பாகவும் பாசமாகவும் இருக்கிறர்ர.

இந்த நேரத்தில், சாயிஷா மீது அவருக்கு காதல் ஏற்பட அவரையே திருமணம் செய்து கொள்ள நினைக்கிறார். ஆனால், அவரது அக்காள் மகள்கள் இருவர் இருப்பதால் அவர்களில் ஒருவதைத்தான் கார்த்தி திருமணம் செய்ய வேண்டும் என்று சொல்கிறார்கள். ஆனால் கார்த்தி சாயிஷாதான் என்பதில் உறுதியாக இருக்கிறார். இதனால் குடும்பத்தில் பிரிவு ஏற்படுகிறது.

அதோடு, சாயிஷாவின் முறைமாமனும் கார்த்தியை கொலை செய்ய ஒரு பக்கம் அலைகிறார். இறுதியில் சாயிஷாவை கார்த்தி கைபிடித்தாரா. பிரிந்த குடும்பம் ஒன்று சேர்ந்ததா என்பதுதான் கடைக்குட்டி சிங்கம் படத்தின் கதை.

வழக்கம்போல் அன்பு பாசம் காதல், மோதல் என்று சிறப்பாகவே நடித்துள்ளார் கார்த்தி. விவசாயத்தை உயிர் மூச்சாக நினைக்கும் அவரது நடிப்பில் உயிரோட்டம் உள்ளது.

சத்யராஜ் நரை முடி அப்பாவாக அசத்துகிறார். அதேபோல் சாயிஷா, பிரியா பவானி சங்கர், அர்த்தனா என அனைவரும் தங்களது பங்குக்கு துடிப்பான நடிப்பை கொடுத்து படத்தின் முதல் பாதியை விறுவிறுப்பாக நகர்த்தி செல்கிறார்கள்.

என்றாலும், இரண்டாம் பாதியில் அவ்வளவு சுவராஸ்யம் இல்லை. கதையின் வேகம் குறைந்து விடுகிறது. மற்றபடி டி.இமானின் இசை, வேல்ராஜின் கேமரா படத்திற்கு பெரிய பலம்.

மொத்தத்தில் கடைக்குட்டி சிங்கம்- விவசாயி மகன்.