ஜோதிகாவின் ஜிமிக்கி கம்மல் நடனம்!

36 வயதினிலே படத்தில் சினிமாவில் ரீஎன்ட்ரி கொடுத்த ஜோதிகா, அதன்பிறகு மகளிர் மட்டும், நாச்சியார் படங்களில் நடித்தவர் தற்போது ராதாமோகனின் காற்றின்மொழி படத்தில் நடித்துள்ளார். இந்தியில் வித்யாபாலன் நடித்து வெளியான துமாரி சூளு படத்தின் தமிழ் ரீமேக்கான இந்த படத்தை ஒரே கட்டமாக நடித்து கொடுத்துள்ளார் ஜோதிகா.

மேலும், வித்யாபாலன் நடிப்பில் இருந்து மாறுபட்டு தனது பாணியில் வித்தியாசமான நடிப்பை ஜோதிகா வெளிப்படுத்தியிருப்பதாக கூறும் இயக்குனர் ராதாமோகன், இந்த படத்தின் கதை இந்தி படத்தின் தழுவலாக இருந்தபோதும் புதுமையான நடிப்பை ஜோதிகா கொடுத்திருப்பதாக சொல்கிறார்.

அதோடு, இந்த படத்தில் ஜிமிக்கி கம்மல் பாடலுக் கும் ஜோதிகா நடனமாடியிருப்பதாக தற்போது ஒரு ருசிகர தகவல் வெளியாகியிருக்கிறது. மலையாளத்தில் செரில் என்ற பெண் பல பெண்களுடன் இணைந்து நடனமாடி வெளியிட்ட ஜிமிக்கி கம்மல் இணையதளங்களில் டிரன்டிங் ஆனது. ஆக, உலக ரசிகர்களை கவர்ந்த அந்த பாடலும் இந்த காற்றின்மொழி படத்தில் இடம்பெற்றிருக்கிறதாம். அதற்கு ஜோதிகா சூப்பர் நடனமாடியிருப்பதாக புதிய தகவல் வெளியாகியிருக்கிறது.