பொங்கலுக்கு ஜெயலலிதா வாழ்க்கை வரலாறு டீசர்!

மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு படத்தை பிரியதர்ஷினி, ஏ.எல்.விஜய் ஆகியார் திரைப்படமாக எடுக்கிறார்கள். இந்நிலையில், டைரக்டர் கெளதம்மேனன் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறை வெப் சீரியசாக இயக்குகிறார். இதில் ஜெயலலிதா வேடத்தில் ரம்யாகிருஷ்ணன் நடிக்கிறார்.

மேலும், இந்த வெப்சீரிஸின் டீசர் வருகிற பொங்கல் தினத்தில் வெளியாகயிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இந்த டீசரில் ஜெயலலிதாவாக நடிக் கும் ரம்யாகிருஷ்ணனுடன், ஜெயலலிதாவுடன் திரைப்படங்களில் நடித்த எம்ஜிஆர், ஷோபன் பாபு, இந்திரஜித் சுகுமார் உள்பட பல நடிகர்களின் கேரக்டர்களும் இடம்பெறுகிறது.