இது உங்க மேடை

வேந்தர் தொலைக்காட்சியில் “இது உங்க மேடை” என்னும் பேச்சரங்க நிகழ்ச்சி  வாரம்தோறும் ஞாயிறு காலை 10:00 மணிக்கு ஒளிபரப்பாகிறது.

தமிழகம் முழுவதும் பல்வேறு நகரங்களில் சமூகத்திற்கு தேவையான பல்வேறு தலைப்புகளில் நடத்தப்படும் இந்நிகழ்ச்சி ஆண் ,பெண் மாணவர்கள் ,சமூக ஆர்வலர்கள் என அனைவரும் பங்கு கொள்ளும் வகையில் நடத்தப்படுகிறது .சமூக பிரச்சனைகளுக்கும் ,தனி மனித ஒழுக்கங்களுக்கும் பல்வேறு கோணங்களில் தீர்வு காணும் விதத்தில் உணர்வுகளின் வெளிப்பாடாய் இந்த பேச்சரங்க மேடை அமைந்துள்ளது.

இந்த பேசறாங்க மேடையில் மொத்தம் 20 நபர்கள் அடங்குவார்கள் .இதில் இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு ஒரு தலைப்பில் இரண்டு மாறுப்பட்ட கருத்துக்களை சாதக ,பாதகங்களை விவாதிப்பார்கள் .நடிகர் ராஜேஷ் இந்நிகழ்ச்சியை மிகச்சிறப்பாகவும் ,கலகலப்பாகவும் சமூக சிந்தனையோடு இந்த பேச்சரங்கத்தை நெறிப்படுத்தி வழங்குகிறார் .