‘இன்று இவர்’

புதிய தலைமுறை தொலைக்காட்சியில் வாரந்தோறும் திங்கள் கிழமை முதல் சனிக்கிழமை வரை மாலை 6:00 மணிக்கு‌ ‘இன்று இவர்’ என்ற நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வ‌ருகிறது.

அரசியல் ஆளுமைகள், சமூக சீர்திருத்தவாதிகள், சாதித்த திரை‌யுலகினர் மற்றும் விளையா‌ட்டு‌ நட்சத்திரங்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரின் வாழ்க்கை வரலாறு சுவையாக தொகுக்கப்பட்டு இந்நிகழ்‌ச்சியி‌ல் ‌வழங்கப்படுகிறது. ‌இவர்கள் தவிர,

விஞ்ஞா‌னிகள், உலகை‌த் த‌ன் பக்கம் திரும்‌பிப் பார்க்க வைத்தவர்கள் போன்றோர் குறித்தும் தகவல்கள் திரட்டப்பட்டு நிகழ்ச்சியாக வழங்கப்படுகிறது. இதுவரை அறிந்திராத சுவாரஸ்யமான தகவல்களை உள்ளடக்கிய ‌வண்ணம் இந் நிகழ்ச்சியை புதிய‌ தலைமுறை ‌தொலைக்காட்சி தயாரி‌த்து நேயர்களுக்கு வழங்கி வருகிறது. இந்நிகழ்ச்சி மறுநாள் அதிகாலை 5.30 மணிக்கு மறுஒளிபரப்பு செய்யப்படுகிறது.