அகில இந்திய பிரபலமாகிறார் அஜித்!

10497தமிழகம் மட்டுமின்றி தென்னிந்தியா முழுவதும் அஜித்துக்கு ரசிகர்கள் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வரும் நிலையில் தற்போது வட இந்தியாவிலும் அஜித் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார்.

சமீபத்தில் ‘வேதாளம்’ படத்தின் இந்தி டப்பிங் யூடியூபில் வெளியான நிலையில் இந்த படத்தை ஐம்பது லட்சத்திற்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர்.

இந்த படத்திற்கு கிடைத்த வரவேற்பை அடுத்து ‘என்னை அறிந்தால்’ படத்தின் இந்தி டப்பிங் படமும் விரைவில் வெளியாகவுள்ளது. ‘என்னை அறிந்தால்’ படத்தின் இந்தி டப்பிங்கை வட இந்தியர்கள் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.