இளையராஜாவுடன் எந்த பிரச்சினையும் இல்லை! – மிஷ்கின்

big_All_eyes_on_Mysskin_and_Ilayaraja-dd54bb353af5d9302c60f18dd46d85cbமிஷ்கின் தற்போது இயக்கி வரும் படம் பிசாசு. தயாரிப்பாளர் ரமேஷின் மகன் நாகா ஹீரோவாகவும். மலையாள டான்சர் பிரயகா ஹீரோயினாகவும் அறிமுகமாகிறார்கள். பிஸ்டூடியோ சார்பில் பாலா தயாரிக்கிறார். இந்தப் படத்திற்கு இசை அமைக்க இளையராஜாவை மிஷ்கின் கேட்டதாகவும். அதற்கு இளையராஜா மறுத்து என் ரிக்கார்டிங் தியேட்டருக்குள் வராதே என்று விரட்டியடித்தாகவும் கூறப்பட்டது.

இதனை மிஷ்கின் மறுத்துள்ளார்.

அவர் கூறியிருப்பதாவது:- இந்த செய்தி தவறானது. இதுவும் ஒரு கிசுகிசு அவ்வளவுதான். நானும் இசைஞானியும் தனி அறைக்குள் பேசிக் கொண்டது எப்படி மூன்றாவது நபருக்குத் தெரியமுடியும். இசைஞானியை சந்தித்து பிசாசு படத்தில் ஒரு இளைஞனை இசை அமைக்க வைக்கப்போகிறேன்னு சொன்னேன் அவரும் சரி பண்ணு என்றார். அவ்வளவுதான். மற்றபடி வேறெதும் பேசிக்கொள்ளவில்லை.

அருள் என்ற இளைஞனைத்தான் இசை அமைப்பாளராக அறிமுகப்படுத்துறேன். அவன் பெயரை மாற்றி வைக்கச் சொன்னதால் அரோல் குரோலின்னு அவனுக்கு பெயர் வச்சிருக்கேன். குரோலி இத்தாலி நாட்டின் புகழ்பெற்ற வயனிலிஸ்ட். அருளும் சிறந்த வயலினிஸ்ட். என்கிறார் மிஷ்கின்.