10 வயது சிறிய ஹாலிவுட் பாடகரை காதலிக்கும் ப்ரியங்கா சோப்ரா!

நடிகை ப்ரியங்கா சோப்ராவும் அமெரிக்க பாடகர் நிக் ஜோனஸும் காதலிப்பதாக கூறப்படுகிறது.

பாலிவுட் நடிகை ப்ரியங்கா சோப்ரா தற்போது ஹாலிவுட்டில் பிசியாக இருக்கிறார். அமெரிக்காவில் தங்கி ஹாலிவுட் படங்கள், டிவி சீரியலில் கவனம் செலுத்தி வருகிறார். அவ்வப்போது இந்தியாவுக்கும் வந்து செல்கிறார்.

ப்ரியங்காவும், அமெரிக்காவை சேர்ந்த பாடகர் நிக் ஜோனஸும் நெருக்கமாக இருக்கும் புகைப்படம் வெளியானது. இந்நிலையில் அவர்கள் காதலிப்பதாக கூறப்படுகிறது.

ப்ரியங்காவும், நிக் ஜோனஸும் ஒருவர் மீது மற்றொருவர் அன்பு வைத்துள்ளனர். இருவரும் ஒன்றாக ஊர் சுற்றுகிறார்கள். இருவரையும் பார்த்தாலே இது நட்பு இல்லை அதையும் தாண்டி என்பது தெரிகிறது என்று அவர்களுக்கு நெருக்கமானவர்கள் தெரிவித்துள்ளனர்.

நல்ல மாப்பிள்ளைக்காக காத்திருக்கிறேன், கிடைத்ததும் திருமணம் செய்து கொண்டு நிறைய குழந்தைகள் பெற்றுக் கொள்ள விரும்புகிறேன் என்று ப்ரியங்கா அண்மையில் தெரிவித்திருந்தார்.

நிக் ஜோனஸ் ப்ரியங்கா சோப்ராவை விட 10 வயது சிறியவர். ஹாலிவுட்டில் தன்னை விட வயது குறைந்த மற்றும் மூத்த ஆண்களை திருமணம் செய்து கொள்வது சர்வ சாதாரணம் என்பது குறிப்பிடத்தக்கது. ப்ரியங்காவுக்கு 35 வயதாகிறது, நிக்கிற்கு 25 வயது ஆகிறது.