நீயா? நானா? கோபிநாத்தின் மண்ட பத்திரம் !

சின்னத்திரையில் தனக்கான ரசிகர் வட்டத்தை வைத்திருப்பவர்களில் முக்கியமானவர் நீயா நானா கோபிநாத்.

சின்னத்திரை நிகழ்ச்சிகள் தவிர இவர் புத்தகங்களும் எழுதி வருகிறார்.

சில ஆண்டுகளுக்கு முன் ப்ளீஸ் இந்த புத்தகத்தை வாங்காதீங்க என்ற பெயரில் ஒரு புத்தகம் எழுதியிருந்தார்.

வாங்காதீங்க சொன்னாலும் நாங்க வாங்குவோம்ல என பலரும் இந்த புத்தகத்தை வாங்க விற்பனையில் சாதனை படைத்தது.

அண்மையில் மற்றொரு புத்தகம் எழுதியுள்ளார்.

அந்த புத்தக தலைப்பை ரசிகர்களே தேர்வு செய்யலாம் என தெரிவித்திருந்தார்.

அதன்படி ரசிகர்கள் தேர்வு செய்த புத்தக பெயரை நடிகர் சூர்யா வெளியிட்டுள்ளார்.

அந்த புத்தகத்திற்கு மண்ட பத்திரம் என பெயரிட்டுள்ளார்.

இந்த புத்தகம் விரைவில் விற்பனைக்கு வரவுள்ளது.