திருமணத்திற்கு தயாராகும் எமிஜாக்சன்!

ரஜினியுடன் நடித்த 2.ஓ படத்திற்கு பிறகு இன்னும் எந்த புதிய படத்திலும் கமிட்டாகவில்லை எமிஜாக்சன். மேலும், அவ்வப்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது சூடேத்தும் புகைப்படங்களை பதிவிட்டு பரபரப்பு நடிகையாக இருந்து கொண்டிருக்கிறார்.

சமீபத்தில் தனது காதலருக்கு உதட்டு முத்தம் கொடுக்கும் ஒரு போட்டோவை பதிவிட்டு கிறிஸ்துமஸ் வாழ்த்து கூறியிருந்தார் எமிஜாக்சன்.

தற்போது புத்தாண்டு தினத்தை முன்னிட்டு காதலருடன் இணைந்திருக்கும் இன்னொரு போட்டோவையும் பதிவிட்டுள்ளார்.

அதோடு அந்த போட்டோவில், 1 ஜனவரி 2019 எங்கள் வாழ்வின் புதிய தொடக்கம். ஐ லவ் யூ. இந்த உலகத்திலேயே மகிழ்ச்சியான பெண்ணாக என்னை மாற்றியதற்கு நன்றி என்று பதிவிட்டுள்ளார் எமி ஜாக்சன்.