பா ரஞ்சித்தின் ‘குதிரை வால்’!

பா ரஞ்சித் இயக்கத்தில், ரஜினி நடிப்பில் வெளியான ‘காலா’ படம் 50 நாட்களை கடந்து சில திரையரங்கில் ஓடிக் கொண்டிருக்கின்றது. நல்ல வெற்றி படமாக அமைந்த இந்த படத்தை தொடர்ந்து ரஞ்சித் எந்த பெரிய ஹீரோவுடன் இணைந்து படத்தை உருவாக்க உள்ளார் என்ற கேள்விக்கு பதில் கிடைத்துள்ளது. 

பா ரஞ்சித் அடுத்து ‘குதிரை வால்’ என்ற படத்தை இயக்க உள்ளார். இந்த படத்தை நீலம் புரடக்‌ஷன் தயாரிக்கிறது. இதில் மொத்தம் 5 கதைகளை உள்ளடக்கியதாகவும், அதில் ஒறு கதையை பா ரஞ்சித் இயக்க உள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

தயாரிப்பாளராக உருவெடுத்துள்ள பா ரஞ்சித், மாரி செல்வராஜ் இயக்கத்தில் ‘பரியேறும் பெருமாள்’ படத்தை தயாரிக்கிறார். இதில் கதிர் மற்றும் கயல் ஆனந்தி ஆகியோர் நடிக்கின்றனர்.