ஸ்ரீரெட்டிக்கு பாரதிராஜா கேள்வி?

டோலிவுட்டில் உள்ள பல பிரபலங்கள் மீது பாலியல் குற்றச்சாட்டை முன்வைத்து பரபரப்பை ஏற்படுத்திய ஸ்ரீரெட்டி, தற்போது கோலிவுட்டிற்கும் வந்து சிலரது பெயர்களை பட்டியலிட்டு பரபரப்பு வளையத்திற்குள் வந்திருக்கிறார். இதையடுத்து, அவருக்கு ஆதரவும், எதிர்ப்பும் வலுத்து வருகிறது.

இந்த நிலையில், ஸ்ரீரெட்டியின் குற்றச்சாட்டு குறித்து டைரக்டர் பாரதிராஜா விடுத்துள்ள ஒரு செய்தியில், ஸ்ரீரெட்டி கூறுவதைப்பார்த்தால் அவரது சம்மதத்துடன்தான் எல்லாம் நடந்துள்ளது. அதனால் அதை வைத்து அவர் பப்ளிசிட்டி தேடிக்கொள்வது தவறு. அதோடு, ஊசி இடம் கொடுக்காமல் நூல் எப்படி நுழையும் என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.