இணையதளம் தொடங்கிய தீபிகா படுகோனே!

பாலிவுட் சினிமாவில் பிரபல நடிகைகளில் ஒருவர் தீபிகா படுகோனே. இவர் சமீபத்தில் நடிகர் ரன்வீர் சிங்கை திருமணம் செய்து கொண்டார். பத்மாவத் படத்திற்கு பிறகு ஷாரூக்கான் நடித்த ஜீரோ படத்திலும் கெஸ்ட் ரோலில் நடித்திருந்தார்.

மேலும், திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து சினிமாவில் நடிப்பை தொடரவிருக்கும் தீபிகா படுகோனே, நல்ல கதைகளை கேட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், தற்போது அவர் தன்னைப்பற்றிய தகவல்களை உடனுக்குடன் அப்டேட் செய்வதற்காக தீபிகா படுகோனே.காம் -என்ற பெயரில் ஒரு இணையதளம் தொடங்கியிருக்கிறார். அதுபற்றிய தகவலை வெளியிட்டுள்ள தீபிகா, என்னைப்பற்றிய உண்மையான, முழுமையான தகவல்களை இந்த இணையதளத்தில் தெரிந்து கொள்ளுங்கள் என்றும் ரசிகர்களை கேட்டுக்கொண்டுள்ளார்.