டக்குன்னு சொல்லுங்க”

வேந்தர் டிவியில் திங்கள் முதல் வெள்ளி வரை மாலை 4:30 மணிக்கு ஒளிபரப்பாகும் நேரலை நிகழ்ச்சி‘டக்குன்னு சொல்லுங்க’.

இந்த நிகழ்ச்சியில் தொலைபேசி மூலம் தொடர்புகொள்ளும் நேயரிடம், நிகழ்ச்சி தொகுப்பாளர் திரைப்படம் தொடர்பாக எளிய கேள்விகளை கேட்க, நேயர்கள் பதில் சொல்வதும் சிலர் தடுமாறுவதும் நிகழ்ச்சியை சுவாரஸ்யமாக்குகிறது. நேயரின் பதிலுக்கு பிறகு புதிய திரைப்படங்களின் பாடல்கள் ஒளிபரப்பாவதால் பாடல்களுக்காகவே ஏராளமான நேயர்கள் தொலைபேசியில் தொடர்பு கொள்கின்றனர்.இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்குபவர் அஞ்சலி .

 ‘டக்குன்னு சொல்லுங்க’ என்னும் இந்த நேரலை நிகழ்ச்சி இளம்தலைமுறையினரிடையே  மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.