அதிர்ச்சி கொடுத்த ஆண்ட்ரியா!

மாறுபட்ட கதைகளாக தேர்ந்தெடுத்து நடிப்பார் ஆண்ட்ரியா. பிடித்த வேடம் என்றால் கவர்ச்சியாக நடிக்கவோ, நெருக்கமாக நடிக்கவோ தயங்க மாட்டார். சமீப காலமாக ஆண்ட்ரியாவின் நடிப்புக்கும் நல்ல பெயர் கிடைத்து வருகிறது.

தரமணி படத்தில் சிங்கிள் மதராக சிறப்பாக நடித்தவர், விஸ்வரூபம் 2 படத்தில் ஆக்‌‌ஷன் காட்சிகளிலும் அசரடித்தார். அடுத்து அவர் நடித்து இருக்கும், வடசென்னை படத்திலும் நடிப்பதற்கு முக்கியத்துவம் உள்ள வேடம்.

எனவே இனி இமேஜ் வி‌ஷயத்தில் கவனம் செலுத்த முடிவு செய்துள்ளார். இனி லிப்லாக், கவர்ச்சி, நெருக்கமான காட்சிகளிலோ, புகை பிடிக்கும் காட்சிகளிலோ நடிக்க மாட்டேன் என்று கதை கேட்கும்போதே கூறிவிடுகிறாராம். ஆண்ட்ரியாவின் இந்த திடீர் முடிவு அவரது அபிமான டைரக்டர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.