அமலா பால் அசால்டா செய்ததை உங்களால் செய்ய முடியுமா?

அமலா பால் சிரசாசனம் செய்தபோது எடுத்த வீடியோ வெளியாகி ரசிகர்களை வியக்க வைத்தது.

அமலா பால் தமிழ் மற்றும் மலையாள படங்களில் பிசியாக இருக்கிறார். சில படங்களுக்கு டேட்ஸ் கொடுக்க முடியாத அளவுக்கு நடித்துக் கொண்டிருக்கிறார்.

நடிப்புக்கு இடையே யோகா செய்ய தவறுவது இல்லை அமலா பால்.

அமலா பால் சிரசாசனம் அதாவது தலை கீழாக நிற்கும் ஆசனம் செய்ய கற்றுக் கொண்டுள்ளார். அவர் சிரசாசனம் செய்தபோது எடுக்கப்பட்ட வீடியோ வெளியாகி ரசிகர்களை வியப்படைய வைத்துள்ளது.

 

தலை கீழாக நிற்பது உடலுக்கு ரொம்ப நல்லது. இதை நான் தற்போது தான் புரிந்து கொண்டேன். சிரசாசனம் செய்வது எளிது அல்ல மிகவும் கடினம் என்கிறார் அமலா பால்.

 

பயிற்சியாளர் வைத்து சிரசாசனம் செய்ய கற்றுக் கொண்டேன். செல்லும் இடங்களுக்கு எல்லாம் யோகா மேட்டை கொண்டு செல்வேன். நேரம் கிடைக்கும்போது எல்லாம் சிரசாசனம் செய்து பழகினேன் என்று அமலா பால் தெரிவித்துள்ளார்.

 

பல நாட்களாக கடினமாக பயிற்சி செய்த பிறகே என்னால் யார் உதவியும் இல்லாமல் தலை கீழாக நிற்க முடிந்தது. சிரசாசனம் செய்வதால் உடல் வலிமை பெறும் என்று யோகாவின் பெருமைகளை பாடிக் கொண்டிருக்கிறார் அமலா பால்.