அஜித்தை நெகடிவ் ஹீரோவாக்கும் மோகன்ராஜா

இயக்குனர் மோகன் ராஜா இயக்கத்தில் சமீபத்தில் வெளியான படம் ‘வேலைக்காரன்’. இதில் சிவகார்த்திகேயன் நாயகனாகவும், நயன்தாரா நாயகியாகவும் நடித்திருந்தார்கள். மேலும் பகத் பாசில், ரோபோ சங்கர், ஆர்.ஜே. பாலாஜி உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள். அனிருத் இப்படத்திற்கு இசையமைத்திருந்தார்.

இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக யாரை வைத்து மோகன் ராஜா படம் இயக்குவார் என்று எதிர்ப்பார்ப்பு நிலவி வருகிறது. சிம்புவை வைத்து படம் இயக்குவதாக ஏற்கனவே செய்திகள் வெளியானது. ஆனால், அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகவில்லை.

இந்நிலையில், தனது டுவிட்டர் பக்கத்தில் ரசிகர்களிடையே கலந்துரையாடி இருக்கிறார் மோகன் ராஜா. இதில் ரசிகர்கள் கேட்ட கேள்விகளுக்கு சுவாரஸ்யமாக பதிலளித்துள்ளார்.

இதில் ரசிகர்கள் ஒருவர், அஜித்தை வைத்து படம் இயக்குவீர்களா? இயக்கினால் என்ன மாதிரியான கதையாக இருக்கும் என்று கேள்வி கேட்டதற்கு, ‘அஜித்தை இயக்குவதற்கு எனக்கு வாய்ப்பு கிடைத்தால் அவருக்காக ஒரு நெகட்டிவ் ஹீரோ கதையை தயார் செய்வேன் என்று பதிலளித்துள்ளார். 

அஜித் நெகட்டிவ் ரோலில் ‘மங்காத்தா’, ‘பில்லா’ போன்ற படங்களில் நடித்து பெரும் வெற்றியினை பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.