சாமி-2வில் நடிக்க மறுப்பு! – மனம் திறந்த திரிஷா

விக்ரம் நடித்த சாமி படத்தின் முதல் பாகத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தவர் திரிஷா. இந்நிலையில், தற்போது தயாராகி வரும் சாமி-2 படத்திலும் திரிஷா நடிப்பார் என்று கூறப்பட்டது. ஆனால், அப்படத்தில் நடிக்க திரிஷா மறுத்து விட்டார்.

அதுகுறித்த காரணத்தை சாமி-2 படத்தை இயக்கும் ஹரியோ, திரிஷாவோ இதுவரை ஓப்பனாக வெளியிடவில்லை. அப்பா விக்ரமிற்கு ஜோடியாக முதிர்ச்சியான வேடத்தில் நடிக்க திரிஷா மறுத்து விட்டதாக மட்டுமே செய்திகள் வெளியாகி வந்தன.

ஆனால் இதுவரை அந்த காரணம் குறித்து வெளிப்படையாக பேசாத திரிஷா தற்போது அதை தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், சாமி படம் எனது முதல் மெகா ஹிட் படம் என்பதால், அதன் இரண்டாம் பாகத்திலும் நடிக்க ஆர்வமாக இருந்தேன்.

ஆனால், இது கதைப்படி எனக்கும், விக்ரமிற்கும் பிறந்த மகன் சம்பந்தப்பட்ட கதை. அதனால் அவருக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறர். அப்பாவாக வரும் விக்ரமிற்கு பெரிதாக காட்சிகள் இல்லை. அவருடன் ஓரிரு காட்சிகளில் இந்தியன் படத்தில் சுகன்யா நடித்தது போன்ற வேடத்தில் நடிக்க என்னை அழைத்தார்கள். அதில் நான் பர்பாமென்ஸ் பண்ணுவதற்கு வாய்ப்பே இல்லை.

தற்போது நான் பல படங்களில் முதன்மை நாயகியாக நடித்து வருகிறேன். இந்த நேரத்தில் நடிப்பில் முத்திரை பதிக்க வாய்ப்பில்லாத ஒரு வேடத்தில் நடித்து எனது இமேஜை கெடுத்துக்கொள்ள விரும்பவில்லை. முதல் பாகத்தில் நடித்த நடிகை என்கிறரீதியில் எனக்கும் கதையில் ஓரளவு முக்கியத்துவம் வைத்திருக்கலாம். ஆனால் டைரக்டர் அதை செய்யவில்லை. விக்ரமைப்பொறுத்தவரை அப்பா – மகன் என இரண்டு வேடங்களிலும் அவரே நடிப்பதால் பிரச்சினை இல்லை.

ஆனால் ஒரு சிறியே வேடத்தில் நான் நடித்தால் அது என்னை பாதிக்கும் என்பதோடு, என்னை கதாநாயகியாக வைத்து படமெடுப்பவர்கள் பாதிக்கக்கூடும். அதனால்தான் சாமி-2வில் நடிக்க மறுத்தேன் என்று தெரிவித்துள்ளார் திரிஷா.