நடிகை தன்யாவிற்கு கொலை மிரட்டல்!

‘18.5.2009’ என்ற பெயரில் புதிய படம் ஒன்று தயாராகி வருகிறது. இதில் கதாநாயகியாக தன்யா ரபியா பானு நடித்து வருகிறார். இப்படம் விரைவில் வெளியாகவுள்ளது. இந்நிலையில் இப்படத்தின் கதாநாயகிக்கு மர்ம நபர் ஒருவர் கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.

மர்ம நபர் நள்ளிரவு 1 மணிக்கு போன் செய்து ஆபாச வார்த்தைகளால் பேசியும், கொலை செய்து விடுவேன் என்று மிரட்டியும் இருக்கிறார். இதுதொடர்பாக, நடிகை தன்யா சென்னை காவல்துறை ஆணையாளர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

இப்படம் நாளை வெளியாக இருக்கும் நிலையில், நடிகைக்கு மர்ம நபர் போன் செய்து கொலை மிரட்டல் விடுத்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.