டாப்சி படத்துக்கு பாகிஸ்தானில் தடை!

தனுஷ் நடித்த ஆடுகளம் படத்தில் தமிழுக்கு வந்தவர் டாப்சி. தொடர்ந்து பல படங்களில் நடித்த அவர், தற்போது தெலுங்கு, இந்தியில் பிசியாக நடித்து வருகிறார். குறிப்பாக, இந்தியில் கதையின் நாயகியாக நடித்து பிரபலமாகி விட்டார் டாப்சி.

அவர் நடித்த சில படங்கள் எந்தவித சர்ச்சைகளை யும் சந்திக்காமல் இருந்த நிலையில், தற்போது அவர் நடித்துள்ள முல்க் என்ற ஹிந்தி படத்தில் முஸ்லீம்கள் தவறாக சித்தரிக்கப்பட்டிருப்பதாக சொல்லி, அந்த படத்தை பாகிஸ்தானில் வெளியிட தடை விதிக்கப்பட்டுள்ளது.

அனுபவ் சின்ஹா இயக்கியுள்ள இந்த படத்தில் ரிஷிகபூர், டாப்சி உள்பட பலர் நடித்துள்ளனர். இதில் டாப்சி ஒரு வழக்கறிஞராக நடித்திருக்கிறார். இந்த படம் ஆகஸ்ட் 3-ந்தேதி அன்று உலகம் முழுவதிலும் வெளியாகியுள்ள நிலையில், பாகிஸ்தானில் மட்டும் வெளியிட தடை விதிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், எப்படியேனும் பாகிஸ்தானில் முல்க் படத்தை வெளியிட்டு விடவேண்டும் என்பதற்கான முயற்சிகள் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.