வதந்தியில் சிக்கிய சாய் தன்ஷிகா!

கபாலி படத்தில் ரஜினியின் மகளாக நடித்து பிரபலமானவர் சாய் தன்ஷிகா. அதன்பிறகு எங்க அம்மா ராணி, விழித்திரு, காலக்கூத்து என சில படங்களில் நடித்தவர், தற்போது தெலுங்கில் அனன்யா உள்பட இரண்டு படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில், அடுத்தபடியாக தெலுங்கில் டாக்டர் ராஜசேகர் நடிக்கும் கல்கி படத்திலும் நாயகியாக சாய் தன்ஷிகா நடிப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இதையடுத்து அப்பட இயக்குனர் பிரசாந்த் வர்மா வெளியிட்டுள்ள செய்தியில், கல்கி படத்தில் யாரை நாயகியாக நடிக்க வைக்கலாம் என்கிற பரிசீலனை நடந்து வருகிறது. ஆனால் தற்போது கல்கி படத்தில் சாய் தன்ஷிகா நடிப்பதாக செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கிறது. அந்த செய்தியில் உண்மையில்லை என்று கூறியுள்ளார்.