நல்லா நடிக்கிறீங்கன்னு சொன்னா சந்தோசமா இருக்கும்! -இந்துஜா

மேயாதமான் படத்தில் வைபவின் தங்கையாக நடித்தவர் இந்துஜா. தமிழ்நாட்டில் உள்ள வேலூரை சேர்ந்த பெண்ணான இவர், அதன்பிறகு பல படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் கவனிக்கப்படும் நடிகையாக வளர்ந்து கொண்டிருக்கிறார்.

இதுகுறித்து இந்துஜா கூறும்போது, மேயாதமான் படத்தில் தங்கை வேடத்தில் நடித்தபோது அந்த வேடம்தான் என்னை பிரபலமாக்கும் என்று நான் நினைக்கவில்லை. சாதாரணமாகத்தான் நடித்தேன். ஆனால் அழுத்தமான பர்பாமென்ஸ் கொடுத்தால் எந்த வேடமாக இருந்தாலும் பிரபலப்படுத்தி விடும் என்பதை அந்த தங்கை வேடத்தில் நடித்த பிறகுதான் புரிந்து கொண்டேன்.

மேலும், அந்த படத்தில் எனது நடிப்பை பார்த்துதான் மெர்குரி, பில்லா பாண்டி, பூமராங் என பல படவாய்ப்புகள் வந்தன. அதோடு, என்னை ஒப்பந்தம் செய்த டைரக்டர்களும் கவர்ச்சி கண்ணோட்டத்தில் பார்க்காமல், பர்பாமென்ஸ் நடிகை என்கிறரீதியிலேயே பார்க்கிறார்கள். இது மனசுக்கு சந்தோசமாக உள்ளது.

மேலும், கதாநாயகியாகத்தான் நடிப்பேன் என்று நான் அடம்பிடிப்பதில்லை. எனக்கு பர்பாமென்ஸ் பண்ண ஸ்கோப் இருந்தால் எந்த வேடத்திலும் நடிக்க தயாராக இருக்கிறேன் என்று கூறும் இந்துஜா, என்னை பார்ப்பவர்கள் நீங்கள் நல்ல அழகாக இருக்கீங்க என்று சொல்வதை விட, நல்லா நடிக்கிறீங்க என்று சொன்னால்தான் எனக்கு சந்தோசமாக இருக்கும் என்கிறார்.