50வது படத்தில் நடிக்கிறார் ஹன்சிகா!

2010ல் தனுஷ் நடித்த மாப்பிள்ளை என்ற படத்தில் அறிமுகமானவர் மும்பை நடிகை ஹன்சிகா. அதையடுத்து ஜெயம்ரவியுடன் எங்கேயும் காதல், விஜய்யுடன் வேலாயுதம் படங்களில் நடித்த அவர், பின்னர் அனைத்து முன்னணி நடிகர்களுடனும் நடித்து வேகமாக வளர்ந்தார்.

சமீப காலமாக மேல்தட்டு நடிகர்களின் படங்கள் குறைந்து விட்டது என்றபோதும் அதர்வா, விக்ரம் பிரபு போன்ற நடிகர்களுடன் நடித்து வருகிறார் ஹன்சிகா. அதோடு கதையின் நாயகியாக நடிப்பதிலும் தீவிரம் காட்டி வருகிறார்.

அதோடு , இதுவரை 49 படங்களில் நடித்து விட்ட அவர் விரைவில் தனது 50வது படத்தில் நடிக்கப்போகிறார். அந்த படம் குறித்த தகவல் தனது பிறந்த நாளான ஆகஸ்ட் 9-ந்தேதி வெளியாகும் என்று தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார் ஹன்சிகா.