மாளிகை படத்துக்காக கதையின் நாயகியாக உருவெடுத்த ஆண்ட்ரியா!

ஆண்ட்ரியா நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘மாளிகை’. “சாந்தி பவானி என்டெர்டெயின்மெண்ட்” சார்பாக கமல்போரா, ராஜேஷ் குமார் இணைந்து தயாரித்துள்ள இப்படத்தை தில்.சத்யா எழுதி இயக்கியுள்ளார்.  இந்த படத்தில் டைரக்டர் கே.எஸ்.ரவிக்குமார்  இன்ஸ்பெக்டர் ரோலில் நடித்துள்ளர். இப்படத்தின் டீசர் வெளியீட்டு விழா மிகப் பிரம்மாண்டமாக நடைபெற்றது. 

இதில் இசையமைப்பாளரும் நடிகருமான விஜய் ஆண்டனி சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்டார். அவர் பேசும்போது , ‘நான் கலந்துகொண்ட நிகழ்ச்சியில் இது மிகப்பெரிய நிகழ்ச்சியாக இருக்கிறது. படத்தின் டைட்டில், டீசர், இந்த விழா என எல்லாமே பாசிட்டிவாக இருக்கிறது. 

இந்தக்கதை மிக வித்தியாசமாக அமைந்திருப்பதால் நிச்சயம் இந்தப்படம் ஜெயிக்கும். சகலகலாவல்லி ஆண்ட்ரியா சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார். இந்தப்படத்திலும் அவர் கலக்கி இருப்பார் என்று நம்புகிறேன்.  பெண் குரலை ஆண்மைத்தனமாக ஆண்ட்ரியவை தவிர யாராலும் பட முடியாது. அடுத்து ஹிந்தி சினிமா வரை அவர் கலக்குவார் என்று நம்புகிறேன். இந்தப்படத்தின் இயக்குனருக்கு பெரிய வாழ்த்துகள்”. அவர் இயக்கம் படத்தில் ஹீரோவாக நடிக்க வேண்டும் ஆசை ஏற்பட்டுள்ளது.