ரசிகர்களுக்கு சூர்யா கொடுத்த பிறந்த நாள் ட்ரீட்!

செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள படத்திற்கு என்ஜிகே என்று டைட்டீல் வைத்திருந்தனர். ஆனால் அதன் விரிவாக்கம் என்ன வென்பது வெளியிடப்படாமலேயே இருந்து வந்தது.

இந்த நிலையில், சூர்யாவின் பிறந்த நாள் ஜூலை 23-ந்தேதியான இன்று என்ஜிகே என்பதின் விரிவாக்கத்தை நந்த கோபாலன் குமரன் என்று வெளியிட்டுள்ளனர். அத்துடன் சூர்யாவின் இரண்டாவது போஸ்டரும் வெளியிடப்பட்டுள்ளது.

மேலும், சூர்யாவுக்கு ஜோடியாக ரகுல் பிரீத் சிங், சாய் பல்லவி நடித்துள்ள இப்படம் தீபாவளிக்கு வெளியாகிறது.