சந்தானத்துக்கு ஜோடியான மலையாள நடிகை !

சந்தானம் நடிப்பில் வெளியாகி வெற்றிபெற்ற படம் ‘தில்லுக்கு துட்டு’. ராம் பாலா இயக்கிய இந்த படத்தின் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு மார்ச் மாதம் 1-ம் தேதி ஹைதராபாத்தில் துவங்கியது. ‘தில்லுக்கு துட்டு’ முதல் பாகத்தில் ஆஞ்சல் சிங் கதாநாயகியாக நடித்திருந்தார். இரண்டாம் பாகத்தில் ஷ்ரதா சிவதாஸ் நடிக்கிறார் . கதைப்படி கதாநாயகி கேரக்டர் மலையாளம் பேசும் மாதிரி உருவாக்கப்பட்டுள்ளதாம். அதனால் மலையாளம் தெரிந்த நடிகை இந்த கேரக்டரில் நடித்தால் நன்றாக இருக்கும் என்ற காரணத்தால் ஷ்ரத்தா சிவதாஸை தேர்வு செய்துள்ளனர்.

மேலும் ‘தில்லுக்கு துட்டு இரண்டாம்’ பாகத்தில் சந்தானம், ஷ்ரத்தா சிவதாஸுடன் மொட்டை ராஜேந்திரன், ஊர்வசி, ‘ஜில் ஜங் ஜக்’ படப்புகழ் பிபின், ‘கலக்கப்போவது யார்’ நிகழ்ச்சி புகழ்’ ராமர், தனசேகர் மற்றும் பிரபல மலையாள காமெடி நடிகர் ஐய்யப்ப பைஜு ஆகியோரும் நடிக்கின்றனர். இப்படத்தை செப்டம்பர் மாதம் வெளியிட திட்டமிட்டுள்ள்னர்.