ஆர்யாவை காப்பாற்றிய கஜினிகாந்த்!

நயன்தாராவுடன் ஆர்யா இணைந்து நடித்த பாஸ் என்கிற பாஸ்கரன் அவருக்கு ஹிட் படமாக அமைந்தது போல், மீண்டும் நயன்தாராவுடன் இணைந்து நடித்த ராஜா ராணியும் அவருக்கு வெற்றியாக அமைந்தது. ஆனால் அதையடுத்து அவர் நடித்த பல படங்கள் தொடர் தோல்விகளாகி விட்டன.

அதனால் ஒரு ஹிட் கிடைக்காமல் தடுமாறிக்கொண்டு வந்த ஆர்யா, சின்னத்திரை நிகழ்ச்சியில் தோன்றினார். அதையடுத்து தற்போது கே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் பெயரிடப்படாத படத்தில் வில்லனாக நடிக்கிறார்.

அதையடுத்தும் வித்தியாசமான வேடங்களில் நடிக்க லாம் என்று அவர் தயாராகிக்கொண்டிருந்த நேரம்தான், கஜினிகாந்த் படம் வெளியானது. இந்த படமும் காலை வாரி விட்டு விடுமோ என்று ஆர்யா மன தளவில் பயந்து கொண்டுதான் இருந்தார்.

ஆனால், கஜினிகாந்த் எதிர்பார்த்ததை விட வரவேற்பு பெற்றது. திரையிட்ட அனைத்து ஏரியாக்களிலும் வசூலித்துக்கொண்டிருக்கிறது. அதனால், மீண்டும் பரபரப்பு வளையத்திற்குள் வந்துள்ளார் ஆர்யா. அதோடு, இதுவரை ஆர்யாவை வைத்து படம் தயாரித்தால் படம் போணியாகாதோ என்று தயங்கி நின்ற சில தயாரிப்பாளர்களும் இப்போது அவருக்கு படவாய்பு கொடுக்க முன்வந்துள்ளார்கள்.