ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட ராஜா ராணி செம்பா…!

ராஜா ராணி சீரியல் மூலம் மிகவும் பிரபலமானவர் ஆல்யா மானசா, இந்த சீரியலால் இவருக்கு மிக பெரிய ரசிகர்கள் கூட்டமே உருவாகி விட்டது.

அதுமட்டுமில்லாமல் அடிக்கடி தன்னுடைய டப்மேஷ் வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து கொண்டே இருப்பார்.

இவர் சமீபத்தில் ஒரு கல்லூரி விழாவிற்கு சிறப்பு விருந்தினராக சென்றிருந்தார், அப்போது அங்கு கூட்டம் அதிகமாக இருந்ததால் யாருடனும் புகைப்படம் எடுக்க முடியவில்லை.

இதனால் அந்த நிகழ்ச்சிக்கு வந்திருந்த ரசிகர்கள் மற்றும் மாணவர்களிடம் மன்னிப்பு கேட்டு தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவு செய்துள்ளார்.