கோச்சடையான் தள்ளிப் போனதன் உண்மையான காரணம் இதுதான்!

Kochadaiyaan (4)கோச்சடையான் படம் வெளியாகாமல் போனதற்கு இன்னொரு முக்கிய காரணமாக படத்தின் இந்தி மற்றும் தெலுங்கு பதிப்புகளுக்கு சென்சார் சான்று கிடைக்கவில்லை என்பதைக் காரணமாகக் கூறியுள்ளனர். ரஜினி மூன்று வேடங்களில் தோன்றும் கோச்சடையான் படம் தமிழ், தெலுங்கு, இந்தி, போஜ்புரி உள்பட 6 மொழிகளில் வெளியாகிறது. கோச்சடையான் படம் தள்ளிப் போனதன் உண்மையான காரணம் இதுதான்!

அனைத்து மொழிகளிலும் 2 டி மற்றும் 3டி வடிவங்களில் இந்தப் படம் தயாராகியுள்ளது. ஒவ்வொன்றுக்கும் தனித்தனியாக சென்சார் சான்று பெற வேண்டும். 2டிக்கு தனியாகவும், 3டிக்கு தனியாகவும் சென்சார் சான்று பெற வேண்டியுள்ளது. இதில் இந்தி மற்றும் தெலுங்கு மொழிகளில் வெளியாகும் கோச்சடையானின் 3 டி வடிவத்துக்கு இன்னும் சான்றிதழ் கிடைக்கவில்லையாம். இதைத்தான் ‘தொழில்நுட்ப காரணமாக படம் ரிலீஸ் தாமதம் என்கிறது தயாரிப்பு தரப்பு. இந்த இரண்டு மொழிகளிலுமே தமிழை விட அதிக அளவிலான அரங்குகளில் கோச்சடையான் வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.