ரூ.15 கோடி சம்பளம் கேட்கும் தீபிகா படுகோனே!

9ee9bc72-e609-4d55-8a24-d8223fd660bf_S_secvpfஇந்தி பட உலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் தீபிகா படுகோனே. இந்த ஆண்டு இவர் நடிப்பில் பிக்கு, தமாஷா, மாஜிராவ் மஸ்தானி ஆகிய படங்கள் வெளியாகின. இதில் பிக்கு வெற்றிப்படமாக அமைந்தது. தமாஷா சராசரி படமாக இருந்தது. தற்போது ஓடிக்கொண்டிருக்கும் மாஜிராவ் மஸ்தானி வசூல் மழை பொழிகிறது.

இந்த ஆண்டு வெளியான 3 படங்களில் இரண்டு நன்றாக ஓடியதால் தீபிகா படுகோனேயின் மார்க்கெட் உயர்ந்துள்ளது. இவரை தேடிவரும் தயாரிப்பாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

இதனால் தீபிகா படுகோனே தனது சம்பளத்தை இதுவரை ரூ.10 கோடியில் இருந்து ரூ.15 கோடியாக உயர்த்தி இருக்கிறார். புதிய படத்தில் நடிக்க அழைத்தவர்களுக்கு இந்த தொகையை சொல்லி இருக்கிறார். என்றாலும், தீபிகாவை தங்கள் படத்தில் நடிக்க வைக்க வேண்டும் என்று பலர் அவரை அணுகி உள்ளனர்.

‘‘நான் நடித்த படங்கள் வெற்றிகரமாக ஓடுவதால் தயாரிப்பாளர்கள் தேடி வருகிறார்கள். சம்பளத்தை உயர்த்துவதில் என்ன தவறு?’’ என்று கேள்வி கேட்கிறார் தீபிகா படுகோனே.