மீண்டும் தள்ளிப்போன வடசென்னை படப்பிடிப்பு!

NTLRG_150523225433000000-600x300டிசம்பர் 18-ல் தனுஷ் நடித்த தங்கமகன் வெளியாகிறது. அதைத் தொடர்ந்து பிரபுசாலமன் இயக்கிய படத்தில் நடித்துமுடித்துவிட்டார். அதற்கடுத்து துரைசெந்தில்குமார் இயக்கத்தில் கொடி படத்தில் நடிக்கவிருக்கிறார். இந்தப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவிருக்கிறது.

இந்தப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததும் வெற்றிமாறன் இயக்கும் வடசென்னை படத்தில் நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் மீண்டும் வடசென்னை தள்ளிப்போவதாக தெரிகிறது.

வடசென்னை படத்துக்கு முன்பாக செல்வராகவன் இயக்கத்தில் ஒரு படத்தில் தனுஷ் நடிக்க திட்டமிட்டிருப்பதாக தெரிகிறது.

தங்கமகன் படம் முடிந்ததும் வடசென்னை படம் தொடங்கப்படும் என்று பல மாதங்களுக்கு முன்பாகவே தனுஷ் சொல்லியிருந்தார். ஆனால் தங்கமகனையடுத்து பிரபுசாலமன் படம் அதற்கடுத்து கொடி அதற்கும் அடுத்து செல்வராகன் படம் என்பதால் வடசென்னை மீண்டும் தள்ளிப்போய்விட்டதாம்.