விமல் எனது பங்காளி, நந்திதா தங்கை! – சொல்கிறார் திலீப் சுப்ராயன்

09da997a-6546-4d36-a92d-ee51bb20a14cவிமல்-நந்திதா நடித்துள்ள படம் அஞ்சல. தங்கம் சரவணன் இயக்கியுள்ள இந்த படத்தை ஸ்டன்ட் மாஸ்டர் திலீப் சுப்ராயன் தயாரித்துள்ளார். கோபிசுந்தர் இசையமைத்துள்ள இந்த படத்தில் பசுபதி, ஆர்.வி.உதயகுமார், ஆடுகளும் முருகதாஸ் உள்பட பலர் நடித்துள்ளனர். இப்படத்தின் ஆடியோ விழா சென்னையில் நடைபெற்றது. அப்போது திலீப் சுப்ராயனின் தந்தையான பிரபல பைட் மாஸ்டர் சூப்பர் சுப்ராயனும் கலந்து கொண்டார்.

இந்த விழாவில் திலீப் சுப்ராயன் பேசும்போது, இந்த படத்தை என் தந்தையிடம் எந்த பண உதவியும கேட்காமல் நானே தயாரித்திருக்கிறேன். படங்களில் பைட் மாஸ்டராக வேலை செய்து கிடைத்த பணத்தில் படத்தை தயாரித்ததால் படத்தை முடிக்க இரண்டறை வருடமாகி விட்டது. அதோடு, பைட் மாஸ்டர் என்பதற்காக நான் ஆக்சன் படத்தை தயாரிக்கவில்லை. ஒரு டீக்கடையை மையப்படுத்திய கதையில் தயாரித்துள்ளேன். ரொம்ப உணர்வுப்பூர்வமான கதை. இதில் விமலின் தந்தையாக நடித்துள்ள பசுபதி தலைநிறைய முடியுடன் ஒரு வித்தியாசமான கெட்டப்பில் நடித்திருக்கிறார். படத்திற்கு எனது பாட்டி அஞ்சலயின் பெயரை வைத்திருக்கிறேன். அது எனக்கு ரொம்ப திருப்தியாக உள்ளது.

மேலும், படத்தில் நடித்த யாருமே எனக்கு இவ்வளவு சம்பளம் வேண்டும் என்று கண்டிசன் போடவில்லை. நான் கொடுத்ததை வாங்கிக்கொண்டார்கள். அந்த வகையில், விமலைப்போன்ற நடிகரை பார்ப்பது அரிது. இதுவரை சம்பளம் கேட்கவேயில்லை. தயாரிப்பாளரின் கஷ்டங்களை தெரிந்த நடிகராக இருக்கிறார். அவரைப்போல்தான் நந்திதாவும். என்னை எப்போது பார்த்தாலும் அண்ணன் என்றே அழைத்தார். அந்த வகையில் இந்த படத்தின் மூலம் எனக்கு ஒரு பங்காளி விமலும், ஒரு தங்கை நந்திதாவும் கிடைத்துள்ளனர். அதோடு, ஆடியோ ரிலீசுக்கு பிறகுதான் படங்கள் விற்பனையாகும். ஆனால் இந்த படத்தை ஆடியோ ரிலீசுக்கு முன்பே வாங்கி விட்டார்கள். ஆக, படம் வெற்றி பெறுவது இப்போதே உறுதியாகி விட்டது என்றார் திலீப் சுப்ராயன்.