மலேசியாவில் ரஜினிக்கு எதிராக சர்ச்சை!

rajiniரஜினி எங்கிருந்தாலும் மக்கள் அவரைச்சுற்றிதான் என்பதை மறுபடியும் நிரூபித்திருக்கிறார் அவர். ஓட்டலில் இருந்து கிளம்பி ஷுட்டிங் ஸ்பாட்டுக்கு போகிற வரைக்கும் வழியெல்லாம் நின்று கையசைக்கிறார்களாம் தமிழர்கள். இது அந்த நாட்டின் பிரதமருக்கே நடந்ததில்லை என்கிறார்கள் அங்கே. நல்லவிஷயம்தான். ஆனால் ரஜினி என்றால் அங்கு சர்ச்சை இல்லாமலா? அப்படிதான் ஒரு தமிழர் பள்ளி நிர்வாகம் தங்கள் பள்ளியில் படிக்கும் குழந்தைகளை ரஜினி வரும் வழியில் அவருக்கு பூங்கொத்து கொடுப்பதற்காக நிற்க வைத்துவிட்டதாம். பல மணி நேரம் கால் கடுக்க நின்றிருக்கிறார்கள் குழந்தைகள். இதை எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்? ரஜினி மீது பிரியம் இருந்தால் அவரை பள்ளிக்கு அழைத்து கவுரவிக்கட்டும். அதற்காக குழந்தைகளை வெயிலில் நிற்க விடுவதா என்று சில அமைப்புகள் குரல் கொடுக்க, அட… ஆரம்பிச்சிட்டாங்களா? என்று அதிர்ச்சியாகிறது தமிழர் வட்டாரம்.