தமிழில் பிஸியானார் எமி ஜாக்சன்!

Amy-Jackson-in-I-Tamil-Latest-Movie-Stills-3-575x300மதராச பட்டினம்’ மூலம் தமிழ் படத்தில் அறிமுகமானவர் எமிஜாக்சன். இந்தி படங்களிலும் நடித்து வருகிறார். ஷங்கர் இயக்கிய ‘ஐ’ படத்தில் நடித்ததன் மூலம் தமிழில் எமிஜாக்சனுக்கு முக்கிய இடம் கிடைத்தது. சமீபத்தில் இவர் நடிப்பில் இந்தியில் வெளியான படம் ‘சிங் இஸ் பிளிங்’. பிரபுதேவா இயக்கத்தில் வெளியான இந்த படம் எதிர்பார்த்ததைவிட மிகப்பெரிய வரவேற்பை பெறவில்லை. என்றாலும், இந்தியில் தான் அவர் தீவிர கவனம் செலுத்துவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், தற்போது தமிழ் படங்களுக்கே முக்கியத்துவம் கொடுத்து வருகிறார். தனுசுடன் ‘தங்க மகன், உதயநிதியுடன் ‘கெத்து’ ஆகிய படங்களில் நடித்து முடித்து விட்டார். அடுத்து விஜய் நடிக்கும் புதிய படத்தில் நடித்து வருகிறார். அட்லி இதை இயக்குகிறார்.

இதுதவிர ஜீவா, சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி படங்களிலும் நடிக்க இருக்கிறார். இவை தவிர ரஜினியின் எந்திரன்–2 படத்திலும் எமிஜாக்சன் முக்கிய வேடத்தில் நடிக்க இருக்கிறார்.

2016 டிசம்பர் வரை தமிழ் படங்களுக்கு கால்ஷீட் கொடுத்து இருக்கிறார். எனவே, எமிஜாக்சன் இனி முழுக்க முழுக்க சென்னை வாசி ஆகி விடுவார் என்று கோடம்பாக்கம் வட்டாரத்தில் பேசப்படுகிறது.