பிரபுதேவாவின் அரவணைப்பில் எமிஜாக்சன்!

emiலண்டன் நடிகையான எமிஜாக்சன் அறிமுகமானது என்னவோ கோலிவுட்டில்தான் என்றாலும், மதராசப்பட்டினம் படத்திற்கு பிறகு கெளதம் மேனன் இந்தியில் இயக்கிய விண்ணைத்தாண்டி வருவாயா ரீமேக்கான ஏக் திவானா தா படத்தில் எமிதான் நாயகியாக நடித்திருந்தார். அந்த படம் தமிழைப்போன்று இந்தியில் ஹிட்டாகவில்லை என்றபோதும், இந்திப்பட இயக்குனர்களை கவர்ந்தார் எமி. ஆனால் அதன்பிறகு தாண்டவம், ஐ படங்களில் தமிழில் நடித்த அவர், இந்தியில் பிரபுதேவா இயக்கிய சிங் இஸ் பிளிங் படத்திலும் நடித்தார். அந்த படம் வெற்றி பெறவே இப்போது எமியிடம் கதை சொல்லி விட்டு கால்சீட்டுக்காக சில டைரக்டர்கள் காத்திருக்கிறார்களாம்.

பிரபுதேவா படத்தில் நடித்துக்கொண்டிருந்தபோது, தமிழில் கெத்து, தங்கமகன், விஜய்யின் 59வது படம் என மூன்று படங்களில் கமிட்டான எமி, தற்போது விஜய் படம் முடியும் தருவாயில் இருப்பதால் அடுத்தபடியாக இந்தி படங்களுக்கு வரிசையாக கால்சீட் கொடுக்கப்போகிறாராம். மேலும், தன்னிடம் டைரக்டர்கள் சொல்லும் கதைகளில் எந்த கதையை ஓகே செய்யலாம் என்பதை பிரபுதேவாவிடம் கலந்து பேசியே முடிவெடுத்து வரும் எமிஜாக்சன், தற்போது மும்பையில் பிரபுதேவா குடியிருக்கும் ஏரியாவிலேயே தானும் ஒரு வீடு பிடித்து குடியேறியிருப்பவர், விரைவில் சொந்த வீடு வாங்கி மும்பையிலேயே நிரந்தரமாக தங்கியிருந்து நடிக்க திட்டமிட்டுள்ளாராம்.