மாற்றுத்திறனாளிகளுக்கு சக்கரநாற்காலிகள் வழங்கிய அஜீத் ரசிகர்கள்!

12243020_902470746503468_7711319280969503951_n-660x300அஜித், ஸ்ருதிஹாசன் நடித்த வேதாளம் படம் இலங்கையில் அஜித் திரைப்பயணத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு அதிக திரையரங்குகளில் திரையிடப்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி அஜீத் ரசிகர்கள் பேனர், கட் அவுட், என கலக்கியுள்ளனர்.

யாழில் அஜித் ரசிகர்களினால் கெட்டதிலும் ஒரு நல்லது நடந்தது. அந்த வகையில் வேதாளம் திரைப்படத்தை கொண்டாடும் விதமாக யாழ்ப்பாணத்து அஜித் ரசிகர்கள் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவிகள் சிலவற்றை செய்துள்ளனர். யாழ் குருநகர் அஜித் ரசிகர் மன்றத்தினைச் சேர்ந்த ரசிகர்கள் சிலர் தாம் சேகரித்த பணத்தைக்கொண்டு மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு சக்கரநாற்காலிகள் மற்றும் நிதியுதவிகளையும் வழங்கியுள்ளனர்.

மூன்று மாற்றுத்திறனாளிகளுக்கு சக்கர நாற்காலிகளும் 2 மாற்றுத்திறனாளிகளின் குடும்பங்களிற்கு தலா பத்தாயிரம் ரூபாய் நிதியுதவியும் வழங்கியுள்ளனர். இதுபோன்ற நல்ல செயல்கள் எதிர்வரும் காலங்களில் ஏனைய இளைஞர்கள் மத்தியிலும் மெதுவாக தோன்றினால் பிற்காலத்தில் பெரியதொரு மாற்றத்தை நம் இளைய சமூகம் பெற முடியும் என்றும் சில சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.