சோனாக்ஷி சின்ஹாவின் அப்பாவை மாற்றிய முருகதாஸ்!

sonakshiதமிழில் வெளிவந்து வெற்றி பெற்ற ‘மெளனகுரு’ படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் தற்போது இந்தியில் ‘அகிரா’ என்ற பெயரில் ரீமேக் செய்து வருகிறார். இந்த படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் நடந்தது.

இறுதிக்கட்ட படப்பிடிப்பில் ஒருசில காட்சிகளில் சோனாக்ஷி சின்ஹாவின் தந்தை கேரக்டர் வருகிறதாம். இந்த கேரக்டருக்காக சோனாக்ஷி சின்ஹாவின் உண்மையான தந்தையான சத்ருஹன்சின்ஹாவை நடிக்க வைக்க ஏ.ஆர்.முருகதாஸ் முடிவு செய்திருந்தாராம்./

ஆனால் ஒருசில காட்சிகளில் மட்டும் நடிப்பதற்கு சத்ருஹன் சின்ஹா ரூ.1 கோடி சம்பளம் கேட்டதால் அதிர்ச்சி அடைந்த முருகதாஸ், சோனாக்ஷி எதுவும் நினைத்துக்கொள்வார் என்பது குறித்து கவலைப்படாமல் அதுல்குல்கர்னியை ஒப்பந்தம் செய்து படத்தை முடித்துவிட்டாராம். முருகதாஸின் இந்த அதிரடி முடிவு குறித்துதான் பாலிவுட்டில் தற்போது ஹாட் டாக்.