ஸ்ரீதேவியை ஏமாற்றிய புலி தயாரிப்பாளர்!

srideviசிபு தமீன்ஸ் மற்றும் பி.டி. செல்வகுமார் தயாரிப்பில் விஜய், ஸ்ருதிஹாசன், ஸ்ரீதேவி, ஹன்சிகா மற்றும் பலர் நடித்த ‘புலி’ திரைப்படம் சமீபத்தில் வெளியானது. இப்படத்தில் நீண்ட இடைவெளிக்குப் பின் ஸ்ரீதேவி முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார். இப்படத்தில் ஸ்ரீதேவிக்கு சம்பளமாக தற்போதுள்ள டாப் ஹீரோயின்களின் சம்பளத்தை விட அதிகமாக தருவதாக ஒப்பந்தம் செய்யப்பட்டது.

தற்போது படம் வெளியாகி நீண்ட நாள் ஆகியும் தனக்கு பேசிய சம்பளத்தில் இன்னும் 50 லட்சம் புலி படத் தயாரிப்பாளர்கள் தரவில்லை என்றும், பலமுறை கேட்டும் எந்தவிதமான பதிலும் வரவில்லை என்றும் தனக்கு சேர வேண்டிய பணத்தை புலி படத் தயாரிப்பாளர்களிடமிருந்து பெற்றுத் தருமாறு மும்பை தயாரிப்பாளர்கள் சங்கத்தில் நடிகை ஸ்ரீதேவி புகார் செய்துள்ளார். ஸ்ரீதேவி மும்பை நடிகர் சங்கத்தில் உறுப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தப் புகாரை தமிழ் திரைப் பட தயாரிப்பாளர் சங்கத்திற்கு மும்பை திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் அனுப்பியுள்ளதாகவும், அவர்கள் புலி படத் தயாரிப்பாளர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.