அஜீத்தின் அறிமுக காட்சி வீடியோ லீக்?

3164அஜீத் நடித்த ‘வேதாளம்’ திரைப்படத்தின் டிரைலர் இதுவரை ரிலீஸ் ஆகாத நிலையில், இந்த படத்தில் அஜீத்தின் அறிமுக காட்சி ஒன்றின் வீடியோ ஒன்று இண்டர்நெட்டில் லீக் ஆகியுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

வெறும் நான்கு விநாடிகளே ஓடும் இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை யூடியூபில் இருந்து படக்குழுவினர் நீக்கிவிட்டாலும் மீண்டும் மீண்டும் பதிவு செய்யப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

இந்த நான்கு வினாடி வீடியோவில் அஜீத் சிரித்த முகத்துடன் அறிமுகமாகும் காட்சி இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த காட்சி படத்தில் இருக்கின்றதா? என்பது வரும் 10ஆம் தேதிதான் தெரியவரும்.